×

மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணியிடம் ரூ.55 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி

சென்னை: மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணியிடம் 55 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் சிக்கிய கடத்தல்காரர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் மத்திய வருவாய் புலனாய்வு மற்றும் போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணியிடம் சோதனை நடத்தப்பட்டதில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ரூ.55 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சம்பவம் குறித்து பயணிகள் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் நேற்று சென்னை விமான நிலையத்தில் ரூ.3.32 கோடி மதிப்புள்ள 6.8 கிலோ எடைகொண்ட 68 தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த பயணிகள் இருவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே நேற்று இரவு மலேசியாவில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், மலேசியா நாட்டை சேர்ந்த ஒரு பெண் பயணி, ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.36.20 லட்சம் மதிப்புடைய 740 கிராம் தங்க நகைகளை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருட்களை கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அவற்றை போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைப்பற்றி வருகின்றனர்.

Tags : Mumbai ,Chennai , Mumbai, Chennai flight, Rs 55 crore, drugs seized
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்